மாற்றங்களைத் தூண்டும் உரையாடல்
இந்தியாவில் இந்திய மொழிகளில் அச்சடிக்கப்பட்ட முதல் நூல் ஒரு தமிழ்நூல் ‘தம்பிரான் வணக்கம்’. கோவாவில் 1578 இல் அச்சடிக்கப்பட்டது. இது தமிழுக்குக் கிடைத்த ஒரு வரலாற்றுப் பெருமை. மொழி, பண்பாடு சார்ந்த இத்தகைய பெருமிதங்கள் மிக அவசியமானவை. நாம் வாய்ப்பு கிடைக்குமிடங்களில் எல்லாம் மீண்டும் மீண்டும் தவறாமல் குறிப்பிடும் பெருமிதங்கள் இதுபோலப் பல உண்டு. ஆனால் இத்தகைய பெருமிதங்கள் அனேகம் வரலாற்றுப் பெருமிதங்களாகவே இருப்பது சிந்திக்கத்தக்கது. குட்டன்பர்க் புரட்சி எனப்படும் அச்சுப் பொறியின் கண்டுபிடிப்பு 15ஆம் நூற்றாண்டில் ஜெர்மனியில் ஏற்பட்டது. இன்றுவரை அச்சு/பதிப்பு துறைகளில் ஜெர்மனி உலகில் முன்னணி நாடாக இருந்து வருகிறது. அதேபோல முதல் அச்சு நூல் தமிழ் நூல் எனும்போது இன்று இந்திய மொழிகளில் முதன்மையான புத்தகப் பண்பாடு நம்முடையதாக இருந்திருக்க வேண்டும். மேலும் வேறு எந்த இந்திய மொழியையும் போலல்லாமல் தமிழ் காலங்காலமாகப் பன்னாட்டு மொழி. இலங்கையில் வரலாற்றுக் காலத்திலும் மலேசியாவில் சில நூற்றாண்டுகளாகவும் இன்று உலகின் பல பகுதிகளிலும் பேசப்படும் மொழி. ஆனால் என்னுடைய பார்வ