தற்கொலை கலாச்சாரத்தின் வேர்கள்
கடந்த செப்டம்பர் 27 அன்று மாலை பதினெட்டு ஆண்டுகளாக நடந்து வந்த சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார நீதிமன்றத்தில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா அப்போது தமிழக முதல்வராயிருந்த ஜெ.ஜெயலலிதாவுக்கு நான்காண்டு சிறைத் தண்டனையும் நூறு கோடி ரூபாய் அபராதமும் விதித்து அளித்த தீர்ப்பு ஜெயலலிதா சிறையில் அடைக்கப்படுவதற்கும் அவரது முதல்வர் பதவி பறிக்கப்படுவதற்கும் காரணமாயிற்று. வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தத் தீர்ப்பையடுத்து ஜெயலலிதாவுக்கு ஆதரவாகக் கடையடைப்புக்களும் ஆர்ப்பாட்டங்களும் உண்ணாவிரதப் போராட்டங்களும் நடைபெற்றன. கோயில்கள், வழிபாட்டுத் தலங்களில் அவர் மீண்டும் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்க வேண்டுமென மேற்கொள்ளப்பட்ட பிரார்த்தனைகளுக்கும் குறைவில்லை. முன்பு டான்சி நிலபேர வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டபோது வேளாண் பல்கலைக்கழகப் பேருந்து தர்மபுரியில் எரிக்கப்பட்டதும், அதில் பயணம் செய்த மாணவிகளில் மூவர் உயிரிழந்ததும் பற்றிய நினைவுகள் பலருக்கும் இப்போது என்ன நடக்குமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருந்தாலும் இப்போது அப்படி எதுவும் நடக்கவில்லை. ஆனால் உயிரிழப்பு வேறுவக