ஆண்டர்சனைத் தேடி...
நாம் நன்கு அறிந்திருந்த வாரன் ஆண்டர்சன் இறக்கும்போது அவருக்கு வயது 30 . அவர் இந்த ஆண்டு செப்டம்பர் 29இல் அமெரிக்காவின் ப்ளோரிடா மாநிலத்தில் இறந்தது அக்டோபரில் தெரிய வந்தது. வாரன் ஆண்டர்சனை ஒசாமா-பின்-லேடனுடன் ஒப்பிடுவதில் தயக்கம் தேவையில்லை. நீதிதேவதையின் ஒரு கண் திறந்தபோது ஒசாமா-பின்-லேடன் கொல்லப்பட்டார். மறு கண் திறக்க மறுத்தது, ஆண்டர்சன் தானே இறந்தார்.
1984 டிசம்பர் 2,3 தேதிகளில் போபாலில் ஒரு புதுவிதமான யுத்தப் பிரகடனம்; அப்பாவிகள் எதிரிகளாகக் கருதப்பட்டு நச்சுவாயுவான மெதில் ஐசோ சயனைடில் மூழ்கடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்கள். ஆண்டர்சனின் யூனியன் கார்பைட் நிறுவனம் அதுவரை பேட்டரிகளையும் பூச்சிக்கொல்லிகளையும் தயாரித்து வந்தது. மேலே சொல்லப்பட்ட இரண்டு தினங்களுக்கு அது வேறு வடிவம் எடுத்தது. அப்போதுதான் பிறந்து முலைப்பால் அருந்திக்கொண்டிருந்த