சுநாதவினோதினி
1986ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் முதன்முதலாக மாண்டலின் ஸ்ரீநிவாஸின் வாசிப்பைக் கேட்கிறேன். ஸ்ரீநிவாஸ் தனது பதினாறாவது வயதில் நடத்திய கச்சேரியின் ஒலிப்பதிவு அது. அந்தக் கச்சேரிக்கு சிக்கில் பாஸ்கரன் (வயலின்), தஞ்சாவூர் உபேந்திரன் (மிருதங்கம்), பாலக்காடு சுந்தரம் (கடம்) ஆகியவர்கள் பக்க வாத்தியம் வாசித்திருக்கிறார்கள்.
‘சரசிஜாக்ஷ’ என்ற காம்போஜி வர்ணத்துடன் கச்சேரி தொடங்குகிறது. இந்த காம்போஜி வர்ணத்தின் முதல் ஸ்பரிசத்திலேயே எம்.எஸ். கோபால கிருஷ்ணனின் அற்புதமும் மந்திரத் தன்மையும் கொண்ட முதிர்ச்சியை பதினாறு வயது ஸ்ரீநிவாஸ் அடைந்திருக்கிறார் என்று அனுபவித்து உணர முடிந்தது. தொடர்ந்து மைசூர் வாசுதேவாச்சாரின் ‘தேவாதி தேவ, ஸ்ரீ வாசுதேவ’ என்ற சுநாதவினோதினி ராகக் கீர்த்தனை.
அறுபத்தைந்தாம் மேளகர்த்தா ராகமான மேச கல்யாணியின் ஜன்ய