அஞ்சாமை, அறிவின் திறன்
நவம்பர் 10ஆம் தேதியன்று ஊடகங்கள் எம்.எஸ்.எஸ். பாண்டியனின் மறைவு குறித்து செய்தியை வெளியிட்டவுடன் பலருக்கும் யார் இந்த மனிதர் என்ற கேள்வி எழுந்தது. அவரது மறைவைத் தொடர்ந்து தமிழ் அச்சு ஊடகங்களில் அரைப்பக்கக் கட்டுரைகளும், முகநூலில் அவரைப் பற்றிய நினைவுக் குறிப்புகளும் தோன்ற ஆரம்பித்த பின்னர்தான், 35 ஆண்டுகள் தமிழகத் தில் தொடர்ந்து பேசியும் எழுதியும் வந்த அவரைப் பற்றிப் பலருக்கும் தெரிந்துகொள்ளும் ஆர்வம் எழுந்தது. மும்பையிலிருந்து வெளிவரும் முக்கியமான ‘எகனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி’ என்ற வார இதழில் தொடர்ச்சியாகக்கட்டுரைகளை அவர் எழுதிவந்துள்ளதை அறிவுஜீவிகள் அறிவர். இந்து ஆங்கில நாளிதழில் அவரது காரசாரமான நடுப்பக்கக் கட்டுரைகள் சில வருடங்களுக்கு முன்புவரை வெளியிடப் பட்டன. இந்து குழுமத்தில் ஏற்பட்ட நிர்வாக மாற்றத் திற்குப்பின் அவரது கட்டுரைகளை வெளியிடு வதை அந்த நாளிதழ் காரணமின்றி நிறுத்திவிட்ட செயல் அறிவுலகத்திற்கு ஏற்பட்ட நஷ்டமே.
<img border="0" height="234" class="img-responsive" class="img-thumbnail img-responsive" src="/media/magazines/f4ad85be-