பிரமை பிரேமை - கு.ப.ரா. சிறுதைகளில் பாட வேறுபாடுகள்
கு.ப.ரா. சிறுகதைகள் நூலின் முதல் பதிப்புக்கும் இரண்டாம் பதிப்புக்குமான வேலைகளில் ஈடுபட்டிருந்தபோது எனக்கு ஆர்வமூட்டிய முக்கியமான ஒரு விஷயம் அவர் கதைகளில் காணப்படும் பாட வேறுபாடுகள் ஆகும். பாட வேறுபாடு தொடர்பான எதையும் பின்னிணைப்பில் கொடுக்கவில்லை. அதற்கான காரணங்களைப் பதிப்புரையில் வெளிப்படுத்தியிருந்தேன். எனினும் பாட வேறுபாடு தொடர்பான கவனம் பல சுவாரசியங்களை எனக்கு வழங்கியது. நவீன இலக்கியத்தைப் பதிப்பிக்கும் ஒருவரும் பழந்தமிழ் இலக்கியப் பதிப்பாசிரியர்களைப் போலவே பாட வேறுபாட்டு ஆய்விலும் ஈடுபட்டுத்தான் ஆக வேண்டும். அது தவிர்க்க இயலாதது.
கு.ப.ரா. எழுதிய ஒரு கதையின் தலைப்பு ‘சிறு கதை’ என்பதாகும். 1935ஆம் ஆண்டு மணிக்கொடி இதழில் இக்கதை வெளியானபோதும் பின்னர் ‘கனகாம்பரம்’ தொகுப்பில் இடம்பெற்ற போதும் கவனமாகச் ‘சிறு கதை’ என