மலையகத் துயரம் 2014
இலங்கையின் மலையகத்தில் உள்ள கொஸ்லாந்த, மீரியபெத்த ஆகிய இடங்களில் சென்ற அக்டோபர் நவம்பர் மாதங்களில் கனமழை காரணமாக ஏற்பட்ட பாரிய மண் சரிவினால் இரண்டு கிராமங்கள் முற்றாகவே அழிந்து போய்விட்டன. இதில் எத்தனை பேர் மாண்டு போனார்கள் என்ற சரியான கணக்கு இன்னும் (மண்சரிவு நடந்து 40 நாட்கள் ஆனபின்னும்) தெரியவில்லை. மீட்புப்பணிகளின்போது 32 சடலங்கள் எடுக்கப்பட்டன. இருபத்து இரண்டு நாட்கள் மீட்புப்பணிகள் நடைபெற்றன. தொடர்ந்து மீட்புப்பணியைச் செய்ய முடியாது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
இயற்கை அனர்த்தங்களில் இத்தகைய பாதிப்புகள் ஏற்படுவது உலகெங்கும் உள்ள வழமை. ஆனால் மலையகத்தில் ஏற்பட்ட பாதிப்பில் எத்தனைபேர் பலியாகினர், என்னமாதிரியான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என்று அறியமுடியாத நிலை, தங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பும் உயிரிழ