ருத்ரய்யா: கனவில் கரைந்த கலைஞன்
‘அவள் அப்படித்தான்’ என்னும் படம் தமிழ் திரைப்பட வரலாற்றில் தனக்கெனத் தனியிடம் பிடித்துக்கொண்டது என்னும் வாக்கியத்தை ஏறக்குறைய 35 ஆண்டுகளுக்குப் பின்னும் இன்னும் கேட்க முடிந்திருப்பதே அப்படத்திற்கான பார்வையாளர்களின் அங்கீகாரம்.ஷ் நானும் ருத்ரய்யாவும் நண்பர் களானதும், ஒரேவிதமான கனவுடனும் லட்சியத்துடனும் சுற்றித் திரிந்ததும் கண்முன்னால் காட்சிகளாக எப்போதும் விரிந்துகொண்டே இருக்கின்றன. எனது நினைவுகளில் ‘அவள் அப்படித்தான்’, ‘கிராமத்து அத்தியாயம்’ உள்ளிட்ட ருத்ரய்யாவின் படமாக்கப் பணிகள் அனைத்தும் அழுத்தமாகப் படிந்துவிட்டன. சேலம் மாவட்டம் உலிபுரம் என்னும் ஊரைச் சேர்ந்த நானும் அதே சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த ருத்ரய்யாவும் 1972 ஆம் ஆண்டில் சென்னை அடையாறு திரைப்படக் கல்லூரியில் சேர்ந்தோம்.
அவர் ஆத்தூ