இந்தக் கட்டுரைக்கு என்ன பெயர் வைக்கலாம், தேனுகா?
எனது இருபத்து மூன்றாம் வயதில் அழகு கிருஷ்ணன் என்ற தமிழ்ப் பேராசிரியரோடு தேனுகா என்னைச் சந்திக்க வீட்டுக்கு வந்திருந்தார். அதுதான் எங்கள் முதல் சந்திப்பு. அப்போது ஒரு விபத்தில் கால்முறிந்து படுக்கையில் இருந்தேன். ‘‘நல்ல மனிதர். மென்மையானவர். எல்லோர்க்கும் உதவுபவர். ஓவியங்கள், சிற்பங்கள், இசைபற்றி எழுதுபவர். தமிழைப் புரியாமல் எழுதுவது என்று சில எழுத்தாளர்கள் கிளம்பி இருக்கிறார்கள்; அவர்களில் தேனுகா ஒருவர்.” என்றெல்லாம் கல்லூரி நாட்களில் அவரைப்பற்றி என் தமிழ்ப் பேராசிரியர்கள் வழியாகக் கேள்விப்பட்டவாறு இருந்தேன். அவரும் என்னைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்திருக்கிறார். தன்னைவிடப் பதின்மூன்று வயது இளையவனான என்னை, நேரில்வந்து சந்தித்து நட்புகொள்ள அவருக்கு எந்த மனத்தடையும் இருக்கவில்லை. ரொம்பவும் கூச்சம் நிறைந்த பெரும்பாலும் மௌனமாகவே இருந்த தேனுகாவைத்தான் நா