முதல் அம்பு
கவிதையைப் படிப்பதும், படித்த கவிதையைப் பின்னர் அசைபோடுவதும் மனத்தின் வேறு வேறு செயல்பாடுகள் என்று தோன்றுகிறது.
இரண்டாவது பகுதியை முதலில் குறிப்பிடலாம். நாளதுவரை வாசக மனம் சேகரித்திருக்கும் அறிவை, தர்க்கத்தை உபயோகித்துக் கண்டறியும் நுண்முனைகளைத் தொகுத்துக்கொள்வது அது.
முதலாவது பகுதி கொஞ்சம் மர்மமானது. முதன்மையானதும்கூட. ஆய்வுபூர்வமான சிந்தனை தொடங்குவதற்கு முன்பாகவே அனுபவித்துத் துய்க்கும் உணர்கொம்புகள் கொண்டது அது.
இதன் காரணமாகவே முதல்வாசிப்புக்குப் புரியாத பல கவிதைகள் மீண்டும் மீண்டும் மறு வாசிப்புக்கு அழைக்கும் வசீகரம் கொண்டவையாக இருக்கின்றன. அதாவது, கவிதை பிடித்திருக்கிறது, ஆனால் புரியவில்லை என்ற உணர்வு தட்டுகிறது.
இன்னொரு வகைக் கவிதைகளை விவரிக்கவே வேண்டாம் - அவை முதல் வாசிப்பிலேயே வாசக மனத்தை வில