ஓய்வு பெற்றபோது...
என் சட்டைப் பையில் இருந்த செல்லுக்கு அழைப்பொன்று வந்தது. அப்புறம் ஒலி அடங்கியது. மாலை நடையை முடித்துக்கொண்டு வந்துகொண்டிருந்தேன். செல்லைப் பார்த்ததும் தேனுகாதான் அழைத்தார் எனத் தெரிந்தது. தெரு, இயந்திரங்களால் நெருக்கியடித்துக் கொண்டிருந்தது. வீட்டுக்குப்போய் நிதானமாகப் பேசலாம் என்று நினைத்துக் கொண்டேன். வழியில் அடுத்த நாளுக்கான காய்கறிகள் வாங்க வேண்டி இருந்தது. வீடு திரும்பும்போது காலனியே இருட்டில் இருந்தது. எல்லா வெட்டுகளும் இப்போதெல்லாம் பழகிவிட்டது. எந்தக் குந்தகமும் இல்லாத நாள் என்பது ஏது?
இருட்டிலேயே தேனுகாவை அழைத்தேன்.
‘தொந்தரவு செய்துவிட்டேனா’ என்றார்.
‘நிச்சயமாக இல்லை. சொல்லுங்கள். நலம்தானே, வீட்டார் எல்லாரும் நலம்தானே?’
‘எல்லாரும் நலம். வரும் 30ஆம் தேதி, நான் பணி ஓய்வு பெறுகிறேன். அந்த நாள