உப்புக் காற்றில் உலரும் கண்ணீர்
2019 சனவரி 10இல் ஈழத்தின் வடகோடித் தீவான காரைத்தீவில் ஒரு ‘துக்கம்’ விசாரிக்க ச் சென்றேன். 2009 மே 17இல் விழுந்த இழவு தீர்ந்துவிடவில்லை. ஈழமண்ணின் விடுதலையில் தணியாத வேட்கை சுமந்து மரணித்த நண்பர் கென்னடியின் முதலாண்டு நினைவேந்தல் நிகழ்வு - இது நண்பருக்குப் பொன்விழா ஆண்டும் கூட . ‘கென்னடி ஓர் பன்முக ஆளுமை’ என்னும் நூல் வெளியீடு நடைபெற்றது.
பிறந்து வளர்ந்து கல்விபெற்ற காரைத்தீவு எனப்பெறும் காரைநகருக்கு ஜான்கென்னடி தன் மரணத்தால் எங்களை வரவழைத்திருந்தார். கென்னடியின் குடும்பம் சைவ வெள்ளாள மரபினது. அவருடைய தந்தை கற்ற கல்வியும் பெற்ற அனுபவமும் வித்தியாசமானது. செல்வநாயகம் தலைமையில் நடைபெற்ற அறவழிப் போராட்டத்தில் கென்னடியின் தந்தை பங்கேற்றார். மகளுக்கு ஸ்டாலின் பெயரில் ‘ஸ்டாலினா வீரமங்கை’ எனப் பெயர்சூட்டி மகிழ்ந்தார். அமெரிக்க அதிபராக இருந்த ஜான் எஃப். கென்ன