பின்னர் வருபவர் பிரமிப்பர்
அரை நூற்றாண்டு அதாவது ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழில் ஒரு பொதுக் கலைக் களஞ்சியம் ‘உலகத் தமிழ்க் களஞ்சியம்’ என்ற பெயரில் சமீபத்தில் வெளியாகியுள்ளது. தனியார் முயற்சியால் உருவான ஆ. சிங்கார வேலு முதலியாரின் அபிதான சிந்தாமணியைத் தமிழின் முதல் கலைக் களஞ்சியமாகக் கருதலாம். அது சமயம், புராணம், இலக்கியம் போன்ற சில தலைப்புகளின் விவரங்களைக் கோவையாக்கியது. அபிதானம் என்றால் பெயர். பெயர் விவரங்களைக் கொண்ட மாலை என அதை விளங்கிக் கொள்ளலாம். அதைப் பிறகு விரிவுபடுத்தி அவரது மகன் இரண்டாவது பதிப்பாக வெளியிட்டார். அதற்கடுத்து ஒரு நூற்றாண்டுக் கனவு என வருணிக்கப்பட்ட தி.சு. அவினாசிலிங்கம் செட்டியார், பெ. தூரன் விடா முயற்சியால் அரசு ஆதரவில் உருவானது அடுத்த தமிழ்க்கலைக் களஞ்சியம். அபிதான சிந்தாமணி ஒரே ஒரு பெரு நூலாக அமைந்தது எனில் இது பத்து தொகுதிகளைக் கொண்டது. 1968இல் நிறைவுற்ற பெரும்பணி அது. அதற்குப்