வாசகரை ஆற்றுப்படுத்தும் வாசிப்பனுபவங்கள்
சினிமா பற்றிய விவாதம் சினிமா அனுபவம், அதைச் சாத்தியமாக்கக்கூடிய சினிமாவின் உள்ளார்ந்த கூறுகள் பற்றியுமே இருக்க வேண்டும். சினிமாவின் வரலாறோ அது சார்ந்திருக்கக்கூடிய கோட்பாடுகளோ நிலைப்பாடுகளோ இத்தகைய உரையாடல்களில் முக்கியத்துவ முடையவையல்ல. எனவே சற்று மனவிலக்கத்துடனேயே தியடோர் பாஸ்கரனின் ‘சினிமா கொட்டகை’ நூலை வாசிக்கத் தொடங்கினேன்.
தியடோர் பாஸ்கரன் தனது பன்புலப் புலமை காரணமாகத் தமிழ் உரைநடைக்குப் புதிய வார்த்தைகள், வார்த்தைப் பிரயோகங்களை அளித்து வருபவர். சுவாரஸ்யமாக எழுதுவதில் தேர்ந்தவர். இந்நூலிலும் இவை தொடர்கின்றன.
நூலின் முதல் கட்டுரை தமிழகத்தில் தேவதாசிப் பாரம்பரியம், அதன் பண்பாட்டு தாக்கம், தேவதாசி ஒழிப்புச் சட்டம் எவ்வாறு தேவதாசிகளை விடுதலை செய்தது, அதன் விளைவாக அவர்களது பொருளாதார நிலை எவ்வாறு பாதிக்கப்பட்டது, தேவதாசிகளும் அவர்களைச் சார்ந்திருந்தவர்களும் புதிய சூழலுக்கேற்ப எவ்வாறு தங்களைத் தகவமைத்துக்கொண்டார்கள் என்பதையெல்லாம் வரலாற்றடிப்படையில் விளக்குகிறது. இது எவ்வாறு தமிழ் சினிமாவில் தாக்கத்தை ஏற்படுத்தியது? இச்சட்டத்தின் மூலம் விடுவிக்கப்பட்ட தேவத