அதுவான தருணம்
அதுவான தருணம்
கவிழ்த்து வைக்கப்பட்ட
நாட்களில் ஒன்றை நிமிர்த்தித்
தன் குறும்புகளால் அலங்கரிக்கிறாள்
மாதமொருதடவை வரும் பேத்தி
அந்தி
பகலாகிறது
தேனாய் நிறைக்கிறாள்
வெறுமையைத்
தின்பண்டங்களும்
விளையாட்டுச் சாமான்களும்
இறைகின்றன
அழத் துடித்துக்கொண்டிருந்த பாட்டி
ஓடுகிறாள் அவள் துள்ளலின் பின்
ஒரு பருவத்திலிருந்து
இன்னொரு பருவத்துக்குச் செல்கிறார்
தாத்தா
குதூகலமாக மீளுகிறார்
அத்தைப்பாட்டி
மழலைமொழியை
மறுபடி மறுபடி உச்சரிக்கிறது வீடு
போதும் நிறுத்து புறப்படலாம் என்