ஓவியத்தில் எழுதவொண்ணா...
றெண்டோ தமிழ்ச்சமூகம் கடந்த மூன்று நான்கு வருடங்களில் மிக முக்கிய ஆளுமைகளை இழந்துள்ளது. பேராசிரியர் செல்வா கனகநாயகம், கவிஞர் திருமாவளவன், அரசியல் செயல் பாட்டாளரும் கவிஞருமாகிய செழியன்.
இப்போது ஓவியர் கருணா.
கருணா, ஓவியம் என்ற விதையில் இருந்து தோன்றிய பெரு வியாபகம், விந்தை. தன்னைச் சுற்றிய எல்லாக் கோணங்களிலும் ஒளிபரப்பிய பரிதி. ஓவியக்கலை, ஒளிப் படக்கலை என்ற தன்னுடைய தனித்துவ ஆளுமை வட்டத்துக்குள் மட்டும் வசித்து விடாது, பன்முகத் தளங்களில் ஓங்கி வளர்ந்தவன் கருணா. கருணா ஒரு தகவல் களஞ்சியம்; மிகப்பெரும் கலைஞன்.
இவை எல்லாவற்றையும்விட, கடந்த இருபத்தைந்து வருடங்களாக என்னுடன் கூட நடந்தவன். காலம் சஞ்சிகையின் வடிவமைப்பாகட்டும், ‘வாழும்தமிழ்’ புத்தகக் கண்காட்சியாகட்டும், நான் ஒழுங்கு செய்யும் கூட்டங்களாகட்டும், என் பக்கபலம் அவன்தான்.
நாங்கள் பல கூத்துகளை அரங்கேற்றியிருக்கின்றோ