தலையாட்டி பொம்மை
காலை ஏழு மணியாகிவிட்டது. குளிர்காலம், சூரியன் இன்னும் விழித்தெழவில்லை. காலடியில் வைத்திருக்கும் சூடாக்கியிலிருந்து எழுகின்ற சூடான காற்றும் அருந்திக்கொண்டிருக்கும் தேநீரும் உடம்பில் படிந்திருக்கும் குளிரை விரட்டிக்கொண்டிருந்தன. தேநீரைக் குடிக்கத் தொடங்கும்போதே உம்மாவுடன் தொலைபேசியில் கதைப்பது அன்றைய நாளின் அத்திவாரம். கதைக்காமல் எந்தவொரு வேலையைச் செய்தாலும் சரிந்து விழுந்துவிடும். மனம் பதைபதைக்கும். பிள்ளைகளின் குறும்புத்தனங்கள், மழலைப் பேச்சுகள், சமையல் என முந்திய நாளின் நிகழ்வுகள் அனைத்தையும் உதிர்த்து முடிப்பேன். அடுத்த பக்கத்திலிருக்கும் உம்மா வெளிநாட்டுச் செய்தி வாசிப்பது போல் ஊரில் நடைபெற்ற திருமண நிகழ்வுகள், மரணங்கள் என அவற்றை அசை போடுவாள். வழமையைப் போலன்றி உம்மாவின் குரல் அன்று தழுதழுத்தது. “ஹலோ” என்ற சொல் உடைந்தபோது சிரமப்பட்டு ஒட்டி மீண்டும் கூறினாள்.
“