மன்னிக்க முடியாத குற்றம்
மிகச் சமீபத்தில் நடந்த பொள்ளாச்சி கூட்டுப் பாலியல் வன்முறைகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி, விவாதப் பொரு ளாக மாறியிருக்கின்றன. இவ்வாறான கொடூர நிகழ்வுகள் அவ்வப்போது நடப்பதும் அதைப் பற்றிப் பேசுவதும் போராட்டம் எழுவதும் பின்னர் அதை மறந்துவிடுவதும்கூட வெகு இயல்பாகிப் போவது கசப்பான உண்மை.
ஆணாதிக்கச் சமூகமாகவும் பெண்ணடிமைச் சமூகமாகவும் ஒட்டுமொத்தமாய் மாறிநிற்கும் வேளையில் வேறென்னதான் செய்துவிட முடியும் என்னும் மனநிலைக்கு மக்கள் சென்றுவிட்டார்களா? ஏன் பெண் மீதான இத்தனை கற்பிதங்கள்? பெண்ணுடல் மீதான இத்தனை புனிதங்கள்? பாலியல் ஒடுக்குமுறைகள்? பாலியல் வன்முறைகள்?
உலகில் நிகழ்த்தப்பட்ட முதல் ஒடுக்கு முறை பெண்ணின்மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைதான். அது அவள் பெண்ணாகவும் உடல்ரீதியாக ஆணிலிருந்து மாறுபட்டும் நிற்கின்ற காரணத்திற்காகவும் இன்றுவரை பால்சார்ந்தும் உடல்சார்ந்தும் அவள் மீதான ஒடுக்குமுறைகள் தொடர்ந்து க