செயலால் சீர்பெறல்
பல்வேறு காரணிகள்
பெண்ணுடல்மீது தொடர்ந்து நிகழும் பாலியல் அத்துமீறல்களுக்கும் குற்றங்களுக்கும் வன்முறைகளுக்கும் ஒற்றைக் காரணம் என்று எதுவும் கிடையாது. இந்துச் சமூகத்தின் தந்தைவழிச் சமூகத்தில் பெண் என்பவள் இயல்பிலேயே நொய்மையானவளாகவும் இரண்டாம் படிநிலையில் உள்ளவளாகவும் இருக்கிறாள்.
வன்முறைகள் ஏன் அதிகரிக்கின்றன என்கிற போது பொருளாதாரக் காரணங்களை முதன்மையாகப் பார்க்கவேண்டியுள்ளது. பொருளாதாரக் காரணங்கள், ஒவ்வொரு சமூகவியல் குற்றங்கள் செயல்பாடுகளின் பின்னும் இருப்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டியிருக்கிறது. பொள்ளாச்சி குற்றத்தில் ஈடுபட்டவர்கள் பெரும்பாலும் 21 வயதிலிருந்து 28 வயதுக்குட்பட்டவர்களாக இருக்கிறார்கள். எவையெல்லாம் இவர்களை இந்தக் குற்றங்களில் ஈடுபட வைத்தது என்கிற கேள்வியுடன் ஆரம்பித்தோமானால் இதன் போக்கு பிடிபடும்.
முதலில் பாலியல் நுகர்விலிருந்து வன்முறை ஆரம்ப