காலம்தோறும் பெண்
அணைக்க முடியாத தீயாக பொள்ளாச்சி விவகாரம் எரிந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் இதுபோன்றதொரு மோசமான பாலியல் குற்றங்கள் நடந்ததாக நினைவில் இல்லை.
பெண்களது நட்பையும் நம்பிக்கைகளையும் பெற்றுத் தங்களது இருப்பிடத்திற்கு அவர்களையும் வரவழைத்து, தீவிரமாகத் திட்டமிடப்பட்ட இந்தக் குற்றச்செயல்கள் நீண்ட நாட்களாக நடந்து வந்திருப்பதை அறியமுடிகிறது.
இந்தக் கும்பலிடம் பிடிபட்டுப் பாதியில் தப்பிப் பிழைத்த ஒரு பெண்ணின் வழியாகத் தான் இந்தக் குற்றம் புகாராக வெளிவந்திருக் கிறது; அதுவும் அந்தக் குற்றவாளியிடம் அவர் இழந்த ஒரு பவுன் சங்கிலியினால்தான் அவரும் அவரது குடும்பமும் புகார்தர முன்வந்திருக்கிறார்கள்.
இதுதான் உண்மை; இந்தப் பெண்ணும் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு மீண்டு வந்திருந்தாரென்றால் இந்தப் பிரச்சனையைத் தன் குடும்பத்திடம் அவர் சொல்லியிருப்பாரா என்பது மிக முக்கியமான கேள்வி.
அரசும்