சொல்லித் தந்தது போதும்
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைச் சம்பவம் ஆண்களைச் சரிசெய்ய வேண்டியதன் அவசியத்தை மீண்டும் வலியுறுத்தியிருக்கிறது.
பாதிக்கப்பட்ட பெண்களையே குற்றம் கூறுகின்ற கலாச்சாரம் கொண்ட சமூக அமைப்பைச் சரிசெய்வதும், பெண்ணின் தொடைகளுக்கு நடுவில் சமூக, இன கௌரவங்களைப் பூட்டிப் பாதுகாக்கின்ற ஆண் மையச் சிந்தனைகளைத் தூக்கி எறிவதைக் கொண்டும்தான் இதுபோன்ற கொடுமைகளிலிருந்து பெண்கள் விடிவு பெற முடியும்.
உடலைப் பூட்டிப் பாதுகாப்பதைப் பற்றிப் பெண்களுக்குச் சொல்லித் தந்ததெல்லாம் போதும். உடல் ஒரு சதைக் கூடு மட்டுமே என்று சொல்லித் தருவதும் அதொன்றும் போற்றிப் பாதுகாப்பதற்கான பொக்கிஷமில்லை என்று சொல்லித் தருவதுமே இனித் தேவை. ஆண்களை நோக்கி இனிப் பெற்றோர்களின் கவனம் இருக்க வேண்டும். இதன் பிறகும் இது உறைக்காவிட்டால் அதைவிடவும் சாபக்கேடு வேறெதுவும் இருக்க முடியாது.
பாலின சமத்துவக் கல்வியின் அவசியத