அன்பைப் பகிர்ந்துகொள்ளும் தருணம்
எண்பதுகளின் இறுதியில் காலச்சுவடு இதழும் தொண்ணூறுகளில் ‘காலச்சுவடு’ பதிப்பகமும் தொடங்கப் பட்டன. அவை தமிழ் இலக்கியப் பரப்பிலும் கருத்துக் களத்திலும் தொடர்ந்து அதிர்வலை களை எழுப்பியபடியே பயணம் செய்து கொண்டிருக்கின்றன. இவ்விரண்டும் தமிழுலகின் இலக்கியப் படைப்புகளை அவற்றின் தராதரத்தின் அடிப்படையில் மட்டுமே பிரசுரித்து வருகின்றன. காலச்சுவடு வாசகர்களின் மீது தன் செல்வாக்கைச் செலுத்தும் அதே நேரத்தில் வாசகர்களும் காலச்சுவடுமீது தம் செல்வாக்கைச் செலுத்துகிறார்கள். இத்தகைய ஒருங்கிணைப்பு கடந்த முப்பது ஆண்டுகளாகத் தமிழிலக்கியத்தை வீரியமடையச் செய்துள்ளன.
காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட நூல்கள் விருதுகளுக்கு உரியன