காட்சிப் பிம்பமும் ஆதார சுருதியும்
சில நாவல்களும் என் வாசிப்புகளும்
கட்டுரைகள்
க. பஞ்சாங்கம்
வெளியீடு:
அகரம்
மனை எண் 1, நிர்மலா நகர்
தஞ்சாவூர் - 613 007
பக். 184
ரூ. 150
1982இல் தமிழவனின் அமைப்பியல் குறித்த நூல் ‘ஸ்ட்ரக்சுரலிசம்’ வெளிவந்தது. வெளிவந்து இருபது ஆண்டுகள்வரை இந்த அமைப்பியலிலிருந்து கிளைத்த எடுத்துரைப்பியல் பற்றி எந்தநூலும் தமிழ்ச்சூழலில் வெளிவராதிருந்த நிலையில் 2003இல் ‘நவீனக் கவிதையியல்: எடுத்துரைப்பியல்’ நூலை வெளியிட்டவர் பேராசிரியர். க. பஞ்சாங்கம். ‘Narratology’ என்கிற ஆங்கிலச் சொல்லுக்கு இணையாக ‘எடுத்துரைப்பியல்’ என்ற சொல்லாடலை, கா. சிவத்தம்பியின் ஒப்புதலுடன் தமிழ்ச் சமூகத்திற்கு அறிமுகம் செய்தவரும் இவரே.வாழ்வின் அனைத்துக் கூறுகளையும் புனைந்து நாவலாக்கித் தர முயலும் படைப்பாளன், தன் புனைவை வாசகனுக்குக் கடத்த முயல்க