நாதனின் நேசமிகு விழிகள்
வெண்பனித் திரள்கள் பொழிந்து கொண்டிருப்பதை நான் ஜன்னலில் முகத்தை அழுத்திப் பார்த்தவனாக இருக்கிறேன். எனது ஒரு பாதி ஜீவித காலம் முழுவதும் தகர்ந்துபோயிருக்கிறது. அது ஏனென ஒரு குறிப்பிட்ட காரணத்தைக் கூற முடியாவிட்டாலும் சொத்துக்கள் சூறையாடப்பட்ட, கையறுநிலைக்கு ஆளான ஒருவரைப் போல எனது உள்ளமானது சலிப்பினாலும் மன அழுத்தத்தினாலும் நிறைந்திருக்கிறது. நான் மகிழ்ச்சியோடு இருந்த காலங்கள்கூட எனது நினைவிலில்லை.
எனது பாடசாலை நாட்களைத்தான் நான் மகிழ்ச்சியோடு இருந்த காலமென்று கூற முடியும்.
யாழ்ப்பாணத்தின் உஷ்ணமான சூரியக் கதிர்களை அரவணைத்தவாறு, புழுதியைக் கிளப்பியவாறு பாடசாலை முடிந்து வீட்டுக்குத் திரும்பும் விதம் நினைவிலெழுகிறது. ஒரு நாள் சாந்தினி, லக்ஷ்மி, ராதா, மனோகரி ஆகியோரோடு நானும் ஏனைய மாணவிகளும் உரத்த குரலில் சிரித்துக் கதைத்தவாறு சென்றுகொண்டிருந்தோம். வரிசையாக வேப்ப மரங்கள் செழ