திப்புசுல்தான் கதைப்பாடல்
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை திருவனந்தபுரம் மகாராஜா பெண்கள் கல்லூரியில் பணிபுரிந்த சமயம் (1901-1930). அவரது வீட்டின் அருகே சிவன்பிள்ளை என்பவர் குடியிருந்தார்; ஆரியசாலை பள்ளியின் தமிழாசிரியர். அவர் மூன்று பவுன் எடையுள்ள தங்கக்காப்பை (வெண்டயம்) கையில் அணிந்திருப்பாராம். “இது என் தாத்தா திருவானந்தத்திற்குத் தர்மராஜா கொடுத்தது,” என்று பெருமை பேசுவாராம்.
சிவனின் தாத்தா திருவானந்தம் இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்தில் செண்பகராமன் புதூரில் வாழ்ந்தவர்; திண்ணைப் பள்ளிக்கூட ஆசிரியர். கவிமணியின் கையெழுத்துக் குறிப்புகளின்படி 1758-1828இல் வாழ்ந்தவர். திருவானந்தம் ‘திவான் வெற்றி’, ‘இராம கீர்த்தனம்’ என்னும் இரண்டு கதைப் பாடல் களை எழுதியிருக்கிறார். இரண்டுமே வில்லிசை என்ற கலையில் நிகழ்த்துவதற்காக எழுதப்பட்டவை.
திவான் வெற்றி கதைப்பாடல் திருவிதாங்கூர் அரசரா