என் இளங்கரும்பே
Love, in its manifold forms, is the only thing that counts. And sex is the most intimate and powerful way to feel and to express it.
- Christa Schulte
‘என் இளங்கரும்பே...’
அவன் அழைத்தான்.
அவள் மிகுந்த சங்கடத்தில் மூழ்கிக் கிடந்திருந்தாள். அந்தக் குரலைக் கேட்டுக் கலகலவென்ற சிரிப்போடு கட்டிலில் எழுந்து உட்கார்ந்தாள்.
‘இளங்கரும்பைக் கடிச்சு முறிச்சுத் திங்கணுமா!’ அவள் சிரித்தாள்... அவ்வளவு மகிழ்ச்சி…
‘பின்ன... கடிச்சு மென்னு சீக்கிரமா தின்னுதீர்க்கமாட்டேன்; மெல்ல மெல்ல உன்னோட மதுரம் முழுசும் ருசிக்கணும்...’
காதலுக்கு மதுரம் மட்டும்தானோ... கசப்பும் உண்டுதானே என்று அவளுக்கு அப்போது சொல்லத் தோன்றவில்லை. அது, அவனுக்கும் அவளுக்கும் தெரியும்.
‘இந்தக்