வெள்ளை மீட்பர்களின் மீள்பரிசோதனை
பச்சைப் புத்தகம், பல விடயங்களைக் கூறுவதாக உள்ளது. அமெரிக்கக் கறுப்பின மக்களிற்கு அவர்களின் நீண்ட காலப் போராட்டத்தின் ஓர் அடையாளமாக இந்நூல் அமைந்துள்ளது. அவர்கள் மீதான வன்முறையின் அடையாளமே இந்நூல். இதனை விக்ரர் கியுகோ கிறீன் என்ற கறுப்பினத்தவர் வெளியிட்டார். 1930ஆம் ஆண்டிலிருந்து 1960ஆம் ஆண்டுவரை தொடர்ச்சியாக மேம்படுத்தப்பட்டு ஒவ்வோராண்டும் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் கறுப்பின மக்கள் தங்கக் கூடிய விடுதிகள் பற்றிய தகவல்கள் அடங்கியது. வெள்ளை இனத்தவர் தங்கும் விடுதிகளில், கறுப்பினத்தவர் தங்குவதற்கு அக் காலகட்டத்தில் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. (கறுப்பினத்தவர் பேருந்திலோ புகையிரத வண்டியிலோ பயணம் செல்லும்பொழுது பல கட்டுப்பாடுகள் இருந்தன. For Colored Only என்ற அறிவித்தலுடன் பல விடுதிகள் இருந்தன. கிறீன், தான் இறக்கும்வரை இந்நூலைத் தொடர்ச்சியாக மேம்படுத்தி வருடாவருடம் வெளியிட்டு வந்தார். The