அபூர்வக் கலையனுபவம்
உலகின் முதன்மை டென்னிஸ் வீரர்களில் ஒருவரான ஸ்வீடனைச் சேர்ந்த ரோஜர் ஃபெடரர் டென்னிஸ் ஆடுவதிலிருந்து ஓய்வு பெறுவதாக செப்டம்பர் 15 அன்று அறிவித்தார். இந்த அறிவிப்பு வந்ததும் இப்பூவுலகம் தன் சுழற்சியை ஒன்றும் நிறுத்திவிடவில்லை. வழக்கம்போலவே வாகனங்கள் விரைந்துகொண்டிருந்தன. சாலையோரக் கையேந்தி பவன்களில் கூட்டம்கூட்டமாக பானிபூரி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். குழந்தைநல மருத்துவமனையில் தாய்மார்கள் அழுகின்ற சேய்களோடு காத்திருந்தார்கள். யாருக்கும் ஒரு மகத்தான விளையாட்டு வீரன் ஓய்வை அறிவித்திருப்பதைப் பற்றிக் கவலை இருப்பதாகத் தெரியவில்லை. ஆனாலும் ஃபெடெரர் ஆடுவதை நிறுத்திக்கொண்டது ஒரு சாதாரண நிகழ்வு அல்லதான். கலைஞர் ஒருவர் தனது இயக்கத்தை நிறுத்திக்கொள்வதில் இந்த உலகம் ஏதோவொரு விதத்தில் பின்னப்பட்டுத்தான் போகிறது. உலகாயத நடைமுறைகளில் ஆழ்ந்திருக்கும் பெரும்பாலோருக்கு நமுட்டுச் சிரிப்பை வரவழைத்தாலும், சிறுபான்மைக் கலாரசிகர்களுக்