சிங்கத்தின் குகையில்
நெல்பேட்டையின் பரபரப்பான பின்மதியப்பொழுது. வாகனங்களும் மனிதர்களும் போட்டிபோட்டு விரையும் போக்குவரத்தின் குறுக்கே, சினைப்பன்றிபோலப் பருத்த தோல்பையைத் தோளில் மாட்டிக்கொண்டு, எதிர்ச் சிறகிலிருந்து சாலையைக் கடந்துவருகிற மருந்துப் பிரதிநிதியின்மீது என் பார்வை படிந்தது. அந்த ஆளின் சாயலும் நடையும் மிகவும் பரிச்சயமானவையாய்த் தென்பட்டன. சிகரெட்டை இன்னொரு தடவை இழுத்துப் புகையை வெளியேற்றுவதற்குள் முகம் துலக்கமாய்த் தெரிந்துவிட்டது - பொன்னுச்சாமி! கடைசியாக அவனைப் பார்த்தது, கல்லூரி இறுதிநாளில். ஏழு வருடம் முன்பு.
அவனும் என்னை முகத்துக்கு நேர் பார்த்துவிட்டான். வேகமாக எட்டுவைத்து வந்து, என் கைகளைப் பற்றிக்கொண்டான்.
ஏ...! கிஸ்ணா... எம்புட்டு நாளாச்சு! எப்பிடிரா இருக்க!!
கையிலிருந்த சிகரெட்டை உரிமையாய்ப் பிடுங்கி, ஓர் இழுப்பு இழுத்துவிட்டுக் கொடுத்தான். நான் எச்சில்படாம