உலகமயமாகும் இலக்கியம்: சில கேள்விகள்
எழுத்து மொழிக்கும் பேச்சு மொழிக்கும் பெருத்த வேறுபாடு கொண்டிருக்கும் தமிழ், இரட்டை வழக்கு மொழி. அனேகமாகத் திராவிட மொழிகள் அனைத்துமே இரட்டை வழக்கு மொழிகள்தான். எட்டுக் கோடி மக்கள் தொகை கொண்டிருக்கும் தமிழ்நாட்டின் எல்லாப் பகுதியிலும் பேசும் தமிழ் மொழி ஒரேமாதிரியானதல்ல. தமிழ்நாட்டின் நில அமைப்புக்கேற்ப ஆறு வகை வட்டார மொழிகள் (Dialect) தமிழில் உண்டு. தமிழ்நாட்டின் மேற்குப் பகுதியாகிய சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, கோவை முதலிய ஆறேழு மாவட்டங்களில் பேசும் தமிழில் நான் எழுதுகிறேன். இதைக் ‘கொங்கு வட்டார வழக்கு’ என்று அழைக்கிறோம்.
தமிழ் நவீன இலக்கியத்தில் ஒரு பிரிவாக ‘வட்டார இலக்கியம்’ உள்ளது. 1940களில் வட்டார மொழியில் குறிப்பிட்ட நில அமைப்பில் வாழும் கிராம மக்களை மையமாகக் கொண்டு படைப்புகள் உருவாயின. அதற்கு முந்தைய எழுத்துக்களிலிருந்து