எலிசபெத்துக்கு ஏங்குங்கள் ஏகாதிபத்திய எச்சங்களை எடைபோடுங்கள்
முதலில் ஒன்றைத் தெளிவுபடுத்திக்கொள்வது நல்லது: எலிசபெத் என்ற தனிப்பட்ட மனுஷி வேறு; மகுடம் சூட்டிய மகாராணியார் வேறு. முன்னையவர் எப்படியான ஆள் என்று அவருடைய குடும்பத்தினருக்கும் அவரைச் சுற்றியிருக்கும் ஒரு சில சாமந்தர்களுக்கும் (courtiers) மட்டுமே தெரியும். ராணியாரைப் பற்றிப் பொதுமக்களும் ஊடகங்களும் சொன்னவை அவரை நேரடியாகத் தெரியாதவர்களின் கற்பித உணர்ச்சியான, சாரமற்ற வார்த்தைகள். இந்தக் கட்டுரை இந்தத் தனிப்பட்ட நபர் பற்றியது அல்ல. முடிசூடி, முடியாட்சிக்கும் ஏகாதிபத்தியத்திற்கும் ஊட்டமளித்தவர் பற்றியது. சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் பிரித்தானிய மன்னராட்சிக்கும் ஒரு தொடர்பு உண்டு. இரண்டுமே அவற்றின் செல்வாக்கையும் ஆட்சியையும் பாரம்பரியத்தையும் நிலைநிறுத்துவதைத் தவிர வேறு நோக்கம் எதுவுமில்லை.
எலிசபெத் என்ற மனுஷியின் மறைவுக்குத் தாராளமாக இரங்கல் தெரிவிக்கலாம்; ஆனால் அவருடைய பேரரசுக்கல்ல. ராணியும் அவளது