நூற்றாண்டுப் பயணம்
காபி ஸ்பூன்களால் அளக்கப்படும் வாழ்க்கையில் நூற்றாண்டுக்கால நித்தியத்துவத்தை அடைய முடிந்திருக்கிறது ‘பாழ்நிலம்’ நீள் கவிதையால், ஜேம்ஸ் ஜாய்ஸின் ‘யுலிஸிஸ்’ நாவல்போல.
ஒருவருக்கே பல காலகட்டத்தில் பலவகையான வாசிப்பு அனுபவங்கள். அவரவருக்கே ஆன பிரத்தியேகப் பாழ்நிலங்கள்.
பதினெட்டு வயதில் பெற்ற சிறு விளக்கச் சுடர்.
‘அடுத்தாற்போல வருகிற பரீட்சைக்குப் படி. பிறகு பார்த்துக் கொள்ளலாம் எலியட்டை’ என்ற தடை வாக்கியத்தைச் சொல்லிவிட்டுப் பாழ்நிலத்திற்குள் சிறிது தூரம் கைப்பிடித்து அழைத்துச்சென்ற பேராசிரியர் உப்பிலியின் கனிந்த கண்கள் இப்பொழுது நினைவின் ஆழத்து முத்துக்கள்.
அவர் எதிர்பார்த்த தரந