மானுடம் போற்றிய மாதவையா
மிகப் பல தலைமுறைகளாக ஒரே பழஞ்சுவட்டில் சுற்றி வந்துகொண்டிருந்த நமது ஜன சமூகவாழ்க்கைப் பெருந்தேரானது இவ்வண்ணம் புதுச்சுவடுகள் பற்றிப் புதியதோர் கிளர்ச்சியோடு நாளுக்கு நாள் முன்னேற்றம் அடைந்துவரும் புத்தியக்கத்துக்கு, நானுமே ஒரு சிறு தூண்டுகோல் என நம்பி, என் மனம் மகிழ்கின்றது.’ தான் இறப்பதற்கு முந்தைய ஆண்டில் அ. மாதவையா எழுதிய வரிகள் இவை. தன் முப்பது ஆண்டுகால எழுத்தின் மூலம் இச்சமூகத்தின் கெட்டித்தட்டிப் போன பழைமைவாதச் சிந்தனைகளில் ஒரு சிறு அதிர்வையேனும் ஏற்படுத்தியிருக்கிறோம் என்கிற பெருமித உணர்வோடு, தனது பங்களிப்பையும் தானே ஆவணப்படுத்திவிட்டுச் சென்றிருக்கும் மாதவையாவுக்கு இவ்வாண்டு ஆகஸ்ட்16, 150ஆவது பிறந்தநாள். இந்த அக்டோபர் 22, அவரது 9ஆவது நினைவுநாளும் கூட. பொதுவெளியிலும் கல்விப்புலங்களிலும் பெரிதாக எந்த உரையாடலும் நினைவுகூரல்களுமின்றி ‘மாதவையா-150’ மீது ஒரு கனத்த மௌனம் கவிந்திருக்க