சமர்ப்பணம்
மனிதன் தனது அன்பைப் பிறருக்கு எப்படியாவது தெரியப்படுத்த விரும்புகிறான். அதைப் பரிசுகள் மூலமாகவோ சன்மானங்கள் மூலமாகவோ தெரிவிக்கிறான். சமர்ப்பணம் அந்த வகையைச் சேர்ந்த அன்புப் பரிசுதான்.
ஆனால், இந்தச் சமர்ப்பணம் ஆரம்பக்காலத்தில் அன்பைத் தெரிவிப்பதற்காக மட்டும் பயன்படவில்லை. ஆனால் அதன் மூலம் ஆதாய வரவையும் உத்தேசித்துத்தான் எழுந்தது.
நமது நாட்டில் கவிராயர்கள் தமது புத்தகங்களை ஜமீன்தார்களுக்கும் வள்ளல்களுக்கும் உரிமையாக்கியது போலவே, மேல்நாட்டிலும் எழுத்தாளர்கள் தங்கள் நூல்களை அரசர்களுக்கும் பிரபுக்களுக்கும் உரிமையாக்கினார்கள். யாருக்குச் சமர்ப்பணம் செய்யப்பட்டதோ அந்த நபர் எழுத்தாளனுக்குப் பிரதியாக, பணம் கொடுத்து உதவுவதுண்டு.
யாரேனும் ஒருவர் இரண்டுவரி எழுதுவதற்காகப் பணம் தருகிறார்களென்றால் எழுத்தாளர்கள் சும்மா இருப்பார்களா? எங்கு பார்த்தாலும் ஒரே சமர்ப்பணமாயிற்று. இதனால் உரிமை பெற்ற பிரபுக்கள் வரையாது கொடுத்துக்கொண்டே இருக்க முடியுமா?
ஆகவே இங்கிலாந்தில் 1798ஆம் வருஷம் ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தார்கள். யாருக்குச் சமர்ப்பணம் செய்ய வேண்டுமோ, அவரி