நட்சத்திரம் நகர்கிறதா?
வானத்தின் ஒளிக்கற்கள்
உக்கிரமானவையெனினும்
ஒன்றையொன்று ஒடுக்குவதில்லை
ஒளி அழகியது
ஒளியில் பட்சமில்லை
ஒளியில் குரூரமில்லை
இப்படித்தான் அவனும் நானும்
நட்சத்திரங்களை நேசிக்கத் தொடங்கினோம்
(ரோஹித் வெமுலவுக்கு)
- சிவசங்கர் எஸ்.ஜே
தமிழ் சினிமாவிலும் தமிழ்ச் சமூகத்திலும் காதல் பற்றிய முன்தீர்மானங்கள் இறுக்கமானவை; பாலினம், வயது, சமூக நிலை, சாதி, மதம் எனப் பலவகைப்பட்டவை. இந்த எல்லைகளுக்குள் அடங்காத காதல், மீறலாகவும் தகாத உறவாகவும் கருதப்பட்டு வந்திருக்கிறது.</p