பாரதி திருநாள்
12-9-1949 அன்று கோவை திரு.ஜி.டி. நாயுடுவின் முயற்சியால் கோவையில் நடைபெற்ற பாரதி விழா நிகழ்ச்சிகளில் கவியரங்கமும் ஒன்று. அந்தக் கவியரங்கில் பல கவிஞர்களும் தமது கவிதைகளை அரங்கேற்றினார்கள். இந்தப் பாடல் அங்கு விசித்திரமாக அரங்கேற்றப்பட்டது. இக்கவியரங்கில் கவிராயரும் (தொ.மு.சி) கு. அழகிரிசாமியும் ‘இரட்டையர்’ ஆகத் தோன்றி, பழைய இரட்டைப் புலவரின் வழியைப் பின்பற்றித் தமது கவியை அரங்கேற்றினார்கள். அதாவது பரஸ்பரம் இருவரும் ஒருவர் அடியெடுத்துக் கொடுக்க, மற்றவர் முடித்துக் கொண்டே வந்தார். முதல் பாட்டின் முதல் இரண்டு அடியும் கவிராயர் பாடியவை. இவ்வாறு அடியெடுத்துக் கொடுத்த பாடலை முடித்ததோடு மறுபாடலுக்கு அடியெடுத்துக் கொடுத்தவர் கு. அழகிரிசாமி. அதாவது முதல்பாட்டின் பின் இரண்டு அடிகளும், இரண்டாம் பாட்டின் முதல் இரண்டு அடிகளும் அழகிரிசாமி பாடியவை. இவ்வாறு இருவரும் மாறி மாறிப் பாடிக் கவிதையைப் பூர்த்தி செய்தனர்.
1<