புதுமைப்பித்தனும் கவிதையும்
‘புதுமைப்பித்தன் கவிதைகள்’ (தொகுத்தது: ரகுநாதன்; கிடைக்குமிடம்: ஸ்டார் பிரசுரம், சென்னை – 5. விலை.ரூ.இரண்டு) என்ற நூல் குறித்து மனிதன் பத்திரிகையில் ‘தமிழ் ஒளி’ எழுதிய ‘இலக்கிய விமர்சன’த்தைப் பற்றி ஆசிரியர் ரகுநாதனுக்குக் கடிதம் எழுதிய நேயர்கள் அனைவருக்கும் அவர் அளிக்கும் பதில் இது.
திருவாளர் விந்தன் நடத்திவந்த மனிதன் என்ற பத்திரிகையில், திருவாளர் ‘தமிழ் ஒளி’ ‘புதுமைப்பித்தன் கவிதைகள்’ என்ற நூலுக்கு ஒரு நீண்ட ‘விமர்சனம்’ எழுதியிருந்தார். புதுமைப்பித்தனின் கவிதைகள் கவிதையே அல்ல என்ற உண்மையை நிரூபிக்கவும், அதனை கவிதை என்று சாதிக்கும் அதன் பதிப்பாசிரியரான ரகுநாதனின் ‘ஞானசூன்ய’த் தன்மையை அம்பலப்படுத்தவுமே திருவாளர் ‘தமிழ் ஒளி’ அரும்பாடுபட்டிருந்தார் ஆனால் மனிதன் பத்திரிகையில் இரண்டு இதழ்கள