கோஹினூர்: ஒரு சாபத்தின் கதை
உயிரற்ற ஒரு பொருளின் வரலாற்றை, அது எவ்வளவு மதிப்புமிக்கதாக இருந்தாலும் தனித்து எழுத இயலாது. கோஹினூருக்கென்று தனியே எந்தக் கதையும் இல்லை. எந்தச் சாரமுமற்ற சாதாரணக் கல் அது. அதன் கதை, அதை உடைமையாக்கிக்கொள்ளத் துடித்தவர்களின் கதை. அவர்களுடைய வெற்றி- தோல்விகளின் கதை. அவர்களுடைய கனவுகளின்- எதிர்பார்ப்புகளின் கதை. அவர்களுடைய மகிழ்ச்சியின்- துயரத்தின், ஏக்கப்பெருமூச்சின் கதை. ஏதுமற்ற ஒரு பொருளுக்கு எண்ணற்ற கதைகளை வழங்கியவர்கள் நாம். கோஹினூருக்கென்று தனியே எந்த மதிப்பும் இல்லை. விலைமதிப்பில்லா ஒரு பொருளாக அது மாறிநிற்பதற்குக் காரணம் நாம். அந்த வகையில் கோஹினூரின் கதை நம் கதை. அதனாலேயே அது ஒரு சிக்கலான கதையாகவும் மாறிநிற்கிறது என்கிறார் நீலாத்ரி பட்டாச்சார்யா.
இவர் ஜவஹர்லால் நேரு பல்