மாணவர்கள் என்ன கற்கிறார்கள்?
கல்வித்துறை தொடர்ந்து விவாதப் பொருளாக இருந்து வருகிறது. கல்வி முறை, கல்விக்கூடச் சூழல், கற்பிக்கும் விதம், ஆசிரியர்களின் வன்முறை, மாணவர்களின் போக்கு ஆகிய பலவும் கவலையோடு விவாதிக்கப்படுகின்றன. இந்தச் சூழலில் கல்வித்துறைச் சார்ந்த பிரச்சினைகளை இந்தத் தொடர் விவாதிக்கவிருக்கிறது.
ஒரு நாட்டின் முன்னேற்றமானது அதன் மக்கள் பெற்றிருக்கும் கல்வி, அறிவு வளர்ச்சி ஆகியவற்றைப் பொறுத்ததே ஆகும். அடிப்படை விஷயங்களுடன் அன்றாட வாழ்வை எதிர்கொள்வதற்குத் தேவையான அனைத்தையும் கற்க உதவுவது கல்வியின் முதன்மை நோக்கமாக இருக்க வேண்டும். எத்தகைய கல்வி நல்லொழுக்கம், மனவலிமை, தன்னம்பிக்கை ஆகியவற்றைத் தருமோ அத்தகைய கல்வியே தேவை. அதனை மாணவரின் உடலும் உள்ளமும் மகிழ்ச்சியுடன் மேற்கொள்ளும்படி அமைத்தல் நலம்.
இன்றைக்குக் கல்வி முறை செயற்கையானதாக, மூளைக்குள் பல செய்திகளையும் திணித்துவைப்பதாக மாறிப் போயிருக்கிறது. திணிக்கப்படும் எதுவுமே நமக்குப் பயன்படாது. தகவல்களைச் சேகரித்து மனனம் செய்து கணினிப் பதிவென வைத்த