இசைபட வாழ்தல்
கர்நாடக இசைக்கலைஞர் ஒருவரின் நியாயமான பெரும் கனவுகளில் ஒன்று சென்னை, சங்கீத வித்வத் சபை (மியூசிக் அகாடமி) வழங்கும் சங்கீத கலாநிதி விருதைப் பெறுவதாக இருக்கலாம். இசை உலகில் வழங்கப்படும் விருதுகளில் மிக மதிப்பு வாய்ந்ததாக இவ்விருது கருதப்படுகிறது. 1929 முதல் வழங்கப்பட்டுவரும் சங்கீத கலாநிதி விருதைப் பெறுவது தங்களது தகுதியை நிலைநிறுத்துவதாக, புகழுக்குப் புகழ் சேர்ப்பதாகக் கலைஞர்களும் எண்ணுகிறார்கள்.
எல்லா உயர்மதிப்பு விருதுகளையும் போலச் சங்கீத கலாநிதி விருதும் அவ்வப்போது விமர்சனங்களுக்கு உள்ளானதுண்டு. எம்.டி. ராமநாதன், டி.என். ராஜரத்தினம் பிள்ளை போன்ற இசை மேதைகளுக்கு விருது வழங்கப்படாதது தொடர்பாக விவாதம் உருவாகியிருந்தது. 2024ஆம் ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருது பாடகர் டி.எம். கிருஷ்ணாவுக்கு அளிக்கப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியானது. உடனே ஒரு சாரார் சர்ச்சையை எழுப்பினார்கள். இசைத்துறைச் சாதனைக்காக ஒருவருக்கு வழங்கப்படும் விருது இசை அல்லாத காரணங்களுக்காக விவாதப் பொருளானது.
கடந்த மார்ச் 18 மியூசிக் அகாடமி செயற்குழு 2024 ஆண்டுக்க