சங்கடம்
ஓவியங்கள்: ரவி பேலட்
“அது சரி, எப்ப என் கதைய படிக்கப் போறீங்க?”
“சீக்கிரமா படிச்சிடறேன். அனேகமா இந்த வாரத்துல.”
“அடேங்கப்பா. ஒரு கதய படிக்க இவ்வளவு நாளா? நியூயார்க் டைம்ஸ் எடிட்டரவிட பிஸியா இருப்பீங்க போலருக்கே.”
“பெரிய பத்திரிகையோட எடிட்டர்தான் பிஸியா இருக்கணுமா? நாங்களும் பிஸியாதாங்க இருக்கோம். இன் ஃபாக்ட், அவங்களவிட பிஸியா இருப்போம். அங்கல்லாம் பெரிய டீம் இருக்கும். ஒவ்வொரு செக்ஷனுக்கும் ஒரு டீம் இருக்கும். எடிட்டரோட வேல ஓவராலா எல்லாத்தயும் கோ–ஆர்டினேட் பண்றது, முக்கியமான டெஸிஷன்ஸ் எடுக்கறது. அவ்ளதான். பல வருஷம் வேல செஞ்சதுல பல விஷயம் செட் ஆயிருக்கும். ரொட்டீன் செட் ஆயிருக்கும். ஆனா எங்க நெலம அப்டி இல்ல. ச