டிரம்ப்: இரண்டாம் வருகை
பிள்ளைகளை மடிமீதுவைத்து நிலா காட்டி, உணவு ஊட்டும் பொய்யர்களும் களவாணிகளும் வன்புணர்வாளர்களும் ஏமாற்றுக்காரர்களும் ஒருபோதும் முன்னேற முடியாது, அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று ஔவையார் பாணியில் அறநெறிப் பாடல்களை நாம் கற்பித்தோம்; ஆனால் பிள்ளைகள் அப்போதும் எம்மை நம்பவில்லை. தேர்தல் முறைகேடுகள், மோசடிக் குற்றச்சாட்டுகள், பாலியல் தாக்குதல்கள், அரசு ஆவணங்களைத் தவறாகக் கையாளுதல் எனப் பல குற்ற விசாரணைகளைச் சந்தித்த டிரம்ப்புக்குக் கட்டுப்பாடற்ற அதிகாரம் பரிசாகக் கொடுக்கப்பட்டுள்ளது. இனிமேலும் எமது ஆத்திசூடித்தனமான போதனைகளைப் பிள்ளைகள் கேட்கப்போவதில்லை.
அமெரிக்காவின் புதிய அதிபரான டிரம்ப் சாதித்த ‘அரும்பெரும்’ காரியங்களில் இந்த இரண்டையும் சேர்த்துக்கொள்ளுங்கள்: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கவிழ்ப்பதற்காக ஜனவரி 2021இல் செய்த முயற்சி உலகளாவிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அத்துடன் இரண்டுமுறை அரசியல் கண்டனம் செய்யப்பட்டவர் இவர். டிரம்ப் இருபது ஆண்டுகளுக்கு முன்பு ‘அப்பிரண்டிஸ்’ என்ற தொலைக்காட்சி வழியாகப் பொ