றாம் சந்தோஷ் வடாற்காடு கவிதைகள்
Courtesy: etsy.com
1. வெளியிடைப் பட்ட உடல்
என் மனசு என் பேச்சைக் கேட்க மாட்டேன் என்கிறது
என் உடல் தேவையற்ற சோம்பலில் இருக்கிறது
இருந்திருந்து பார்த்துவிட்டு எஞ்சிய வெறுப்பின்
உதவாத கையைப் பிடித்துக்கொண்டு
நான் ஒரு பகலை வழக்கம்போல் பிரயோஜனமற்று
ஒழித்துக் கட்டிவிட்டேன்.
வானிலை மாறி மேகம் வெயிலைத்
திசை மாற்றி அனுப்பிக்கொண்டிருக்கும்போது
ஏதோவொரு ஓர்மையின் தயவில்
இந்த என் உடலைக் கொண்டுபோய்
யாருமற்ற பாதையில் கிடத்தினேன்.
பூரா திசைகளிலிருந்தும் வந்து தாங்கும் காற்று
என் ஈரலெல்லாம் நிறைந்து உடலெல்லாம் மிதக்கிறது போலாகிறது
லேசாக லேசாக வழியுமொரு கண்ணீரில் நனைந்தபடி
வேர்வையால் குளிர்ந்த சட்டையோடுமாக<b