ஸ்நேஹலதையின் தற்கொலை புதிதாகக் கண்டறியப்பட்ட பாரதியின் படைப்பு
‘ஸ்நேஹலதையின் தற்கொலை!’ 1914இல் பாரதி எழுதிய குறுங்கட்டுரையின் தலைப்பு இது. இதுவரை பாரதியியல் அறிந்திராத பாரதியின் எழுத்து. தலைப்பில் இடம்பெறும் ஸ்நேகலதையின் வரலாற்றையும் பாரதி வரலாற்றின் புதிய பக்கங்களையும் இப்படைப்பு நமக்கு உணர்த்துகின்றது.
யார் இந்த ஸ்நேகலதை என்னும் ஸ்நேகலதா? அவர் ஏன் தற்கொலை செய்துகொண்டார்?
வங்காளத்திலே வடக்கு கல்கத்தாவில் வாழ்ந்த பதினான்கு வயது இளம்பெண் ஸ்நேகலதா. அவளுக்குத் திருமண ஏற்பாட்டை மேற்கொண்ட அவளுடைய தந்தை மணமகன் வீட்டார் கேட்டிருந்த வரதட்சணையைக் கொடுக்க அவர்களுக்கிருந்த ஒரே சொத்தான வசிக்கும் வீட்டை விற்க ஏற்பாடு செய்தார்