துணை
ஓவியங்கள்: மணிவண்ணன்
அவளுக்குப் பிடித்த இடம் அது. ஜன்னலை ஒட்டினாற்போல நாற்காலியை இசைவாக வைத்து அமர்ந்தால் அகில உலகமும் தெரியும். ஜன்னலுக்கு அப்பால் ஒரு உலகம் இருந்தது. இயற்கை ஆட்சி புரிந்த உலகம். நீண்ட நெடிய பூங்கா. அந்தச் சிறிய அறை அவளுடைய சாம்ராஜ்ஜியம். தனக்கென்று அவள் பொறுக்கிக்கொண்டது. அதன் ஜன்னல் வழியே தெரியும் பூங்காவுக்காவே அந்த வீட்டை அவள் பொறுக்கினாள். அப்பவே அவள் திட்டமிட்டது. ஜன்னலுக்கு அருகே மேஜை. அதையொட்டி நாற்காலி. மேஜைமேல் வெள்ளைத்தாள்கள், ஒரு பேனா. அவள் சொத்து.
“இன்னமும் கையிலேயேவா எழுதறே?”
“ஆமாம்.”
“இன்னும் கம்ப்யூட்டர் பழகல்லே?”
“இல்லே!”
“கஷ்டமாஇல்ல, கையினாலே எழுதற