சந்தைக்கடை
ஓவியம்: ரவி பேலட்
சம்பர் மாதம் வந்தால் பறவையாகி விடுவான் திகழ். அரூபச் சிறகுகள் விரியத் துள்ளல் கூடிய உடலோடே திரிவான். ஆண்டு விழா மாதம். கலை நிகழ்ச்சிப் பயிற்சிகள், விளையாட்டுப் போட்டிகள் எனப் பள்ளி முழுவதும் மைதானத்திற்கு வந்துவிடும். வகுப்புகள் குறைவாகவே இருக்கும். அது இரண்டாம்பட்சம் அல்ல, பட்சமே இல்லாமலாகிவிடும். வீட்டுப்பாடங்களைக் கண்டுகொள்ள மாட்டார்கள். குளிச்சியா, சட்ட போட்டியா, சாப்பிடு, லஞ்ச் பேக் எடுத்துக்கிட்டயா என்று காலை நேரத்தில் எந்த வேலையையும் அவனுக்கு நினைவுபடுத்த வேண்டியதில்லை. தூக்கத்திலிருந்து கெஞ்சிக் கொஞ்சி எழுப்ப வேண்டியதில்லை. எல்லாம் வேகமாக நடக்கும். தானாக நடக்கும். பள்ளிப் பேருந்துக்கு ஐந்து நிமிடம் முன்னாலேயே போய் நின்றுகொள்வான். பேருந்தில் நண்பர்களுடன் பேசப் பல விஷயங்கள் இருக்கும். வீட்டுக்கு வந்தும் இது ந