டிரம்ப் ராஜ்ஜியத்தில் பாரதமாக இருப்பது
டிரம்ப் எல்லா நாடுகளுக்கும் இறக்குமதித் தீர்வை விதித்திருக்கிறார். தீர்வையின் அளவு மாறுபடும். இதில் இந்தியாவிற்கு விதிக்கப்பட்ட தீர்வைதான் அனைத்து நாடுகளைவிடவும் அதிகம், 50%. இந்தியா அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களை வேறு சில நாடுகளும் ஏற்றுமதி செய்கின்றன. அவை இந்தியாவின் போட்டியாளர்கள். அவர்களுக்குத் தீர்வையைக் குறைவாக விதித்திருக்கிறார் டிரம்ப். ஆகவே அமெரிக்கச் சந்தையில் இந்தியப் பொருட்களின் விலை மிகும், விற்பனை தேயும். இந்தியாவிற்கு டிரம்ப் வழங்கியிருக்கும் இந்தப் பெருமையின் கனத்தைத் தாங்க ஏலாமல் ஏற்றுமதியாளர்களும் உற்பத்தியாளர்களும் தவிக்கிறார்கள். இப்படியொரு அதீதத் தீர்வை விதிக்கப்படக்கூடும் என்பதற்கான எந்த முன்னெச்சரிக்கை