விலக்கப்பட்டோருக்கான கல்வி
வரைகலை: மு. மகேஷ்
கல்வி மறுக்கப்பட்ட ஏழை, ஒடுக்கப்பட்ட குழந்தைகளைப் பள்ளிக்குள் கொண்டுவருவதே கல்வியின் நோக்கம். யுனெஸ்கோவின் ஓர் அறிக்கை, ‘கல்வியின் நோக்கம் விலக்கப்பட்டோரையும் உள்ளடக்கிக் கற்பிப்பதே’ (The purpose of education is to include the excluded) என்று சொல்கிறது. உலக நாடுகள் பெரும்பாலானவற்றிலும் அந்நாடுகளின் அரசுகள், தங்கள் மக்களின் கல்வி குறித்த அக்கறையுடனும் அதற்கான தொடர்ந்த முன்னெடுப்புகளுடனும் செயல்படுவதைப் பார்க்க முடிகிறது. மாறிவரும் சமூகச் சூழ்நிலை, உளவியல், தொழில்நுட்பம் இவற்றோடு பொருத்திப்பார்த்தே பாடத்திட்டம் தீர்மானிப்பதுடன் அந்தந்த இடத்துக்குத் தகுந்தாற்போல் மாற்றிக்கொள்ளும் வகையில் (Flexible) மாணவர் நலனே கவனப்படுத்தப் படுகிறது. இந்தியாவில் கல்வி வளர்ச்சிக்கான முன்னெடுப்புகளோ கல்வித்திட்டம் குறித்