ஜெபா கவிதைகள்
1
சிதறிய அனேகங்களின் சிதிலம்
சற்று மூர்க்கமேறும்
அச்சங்கொண்டும்
தேற்றமடைந்தும்
இருள் துவங்கும் ஒரு மாலையின்
பரபரப்பில்
கவிழ்த்து வைக்கப்பட்ட
தேநீர் கோப்பையை நிமிர்த்தி நிரப்பி
ஆசுவாசப்பட்ட சற்று நேரத்தில்
வானில் வெள்ளிகளும் அரை நிலவும் மேய்ந்து திரியும்
அந்தியின் தேய்தல் அத்தனை மனோகரமா?
2
சோக நகர்வுகளைக் காட்ட
முண்டியடிக்கின்றன நாட்காட்டிகள்
நிமித்தங்களை முனைப்புடன் வெளிப்படுத்தியும்
புறந்தள்ளித் திரிந்த கணங்கள் சாட்சிகளாயின
நினைவேறும் நிமிடங்களை பிழையின்றி நகர்த்த முயன்று
தோல்வியில் அரங்கேறும் நாழிகைகளுக்காக
மறுகிக்கிடந்த பாழ்மனம்
பரவசங்கொள்கிறது அங்கோர் மின்மினி ஒளியில்
3
நிகழ்வுகள் சாரமிழந்தபின்னும்
பிம்பங்கள் அதிர்ந்து குலுங்குகின்றன
காலத்தின் முன்கூறல்களில்
மழுங்கியும் மருவ