ஆணவக்கொலைகளின் உண்மை விலை
Painting: ‘Face 6’ / Pen, Ink & Acrylic on Canvas,
Mangesh Narayanrao Kale. Courtesy: ‘ARTS ILLUSTRATED”
சாதிசார்ந்த வன்முறைகள் எங்கோ தொலைவிலுள்ள குக்கிராமங்களிலும் வர்க்கத்தினர் அடித்தட்டு மத்தியிலும் நிலவுவதாகக் கற்பிக்கப்படுகிறது. பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டவுடன் சாதியின் வீரியம் குறையும் என்று நம்பிவந்த வேளையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தில் நடைபெற்றுவரும் தலித்துகளுக்கு எதிரான சாதிய வன்முறைகள் நமக்கு வேறு செய்திகளைச் சொல்கின்றன, அதேபோல நகரங்கள் சாதியற்றதாகக் கற்பிக்கப்படுகின்றன. இதுவும் உண்மையில்லை. தமிழகத்தில் தலித்துகள் பொருளாதார அடுக்கில் உயர்நிலையிலிருந்தாலும் சரி பெருநகரத்தில் குடியிருந்தாலும் சரி, அவர்கள் எங்கிருப்பினும், சாதிய வன்முறையிலிருந்து தப்ப முடிவதில்லை.
சாதி க